விளையாட்டுத்துறை அமைச்சின்கீழ் இயங்குகின்ற ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் 2023 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டி
விளையாட்டுத்துறை அமைச்சின்கீழ் இயங்குகின்ற ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் 2023 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டி கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான், முகம்மத் இக்பால் தலைமையில், தேசிய சம்மேளன தலைவர் சிஹான், சிசிர குமார அவர்களின் பங்கேற்புடன் 24.06.2023 சனிக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகள் மாட்ட ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் நடைபெற்றது. ஆறு தொடக்கம் பதின்மூன்று வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான போட்டி நிகழ்சிகள் அனைத்தும் மாவட்ட போட்டியாகும், பதின்நான்கு வயதிலிருந்து சிரேஸ்ட மாணவர்களுக்கான போட்டிகள் மாகாண போட்டியாகும் நடைபெற்றது.
இப்போட்டிகள் காத்தா, குமிதே, குழு காத்தா ஆகிய நிகழ்சிகளாக நடைபெற்றது. இந்நிகழ்சிகளில் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் நடைபெறுகின்ற தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய கராத்தே போட்டி அடுத்த மாதம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment