காத்தான்குடிக்கு விஜயம் செய்த ஆளுநர் : ஈச்சம்பழத்தையும், குர்ஆனையும் அன்பளிப்பாக பெற்றார் !
காத்தான்குடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சென்று தரிசத்ததுடன் தமிழ் மொழி, மொழி பெயர்ப்புடன் கூடிய குர்ஆன் பிரதி பள்ளிவாயல் கதீபினால் வழங்கி வைங்கப்பட்டது. கிழக்கு ஆளுநர் இறைவனின் அருளே இன்று இப்பள்ளிவாயலை தரிசிக்க கிடைத்தமை எனவும் இதையொட்டி தான் மிகவும் சந்தோஷம் அடைவதாகவும் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள்,கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி. மதன், பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், காத்தான்குடி நகரசபை செயலாளர் றிப்ஹா சபீன், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பெருந்திரளான மக்கள் கலநது கொண்டதுடன் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் ஆளுநருக்கு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காத்தான்குடியில் அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம் பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளர் றிப்ஹா சபீனிடமிருந்து ஆளுநர் பெற்றுக் கொண்டார்.
இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் இதன்போது ஆலோசனை தெரிவித்தார்.
காத்தான்குடிக்கு விஜயம் செய்த ஆளுநர் : ஈச்சம்பழத்தையும், குர்ஆனையும் அன்பளிப்பாக பெற்றார் !
Reviewed by Author
on
June 25, 2023
Rating:

No comments:
Post a Comment