மன்னார் அம்மாச்சி உணவகத்தில் சேவையை விரிவுபடுத்துமாறு கோரிக்கை
மன்னார் அம்மாச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அம்மச்சி உணவகத்தின் சேவையையும் தரத்தையும் விரிவுபடுத்துமாறு அவ் உணவகத்தை பயன்படுத்துவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
குறிப்பாக காலை நேரங்களில் அரச மற்றும் தனியார் நிருவனங்களில் பணியாற்றும் நூற்றுக்கணக்கானோர் அவ் உணவகத்தை நம்பி உள்ள நிலையில் பல சமயங்களில் உணவை பெற்று கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக பலர் தெரிவிக்கின்றனர்
சில நேரங்களில் குறிப்பிட்ட உணவுகளை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்
எனவே குறித்த உணவக நிர்வாக சேவையை விரிவுபடுத்தி உணவுகளை கொள்வனவாளர்கள் இலகுவாகவும் விரைவிலும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறு அவ் உணவக பயணாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:
Post a Comment