நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்!
நாளை விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமரப்பிக்ப்படும் என்றும், வார இறுதியில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பயணத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை,கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இனறு முற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
June 27, 2023
Rating:


No comments:
Post a Comment