பேபி செரமி நிறுவனத்தினால் கர்ப்பவதிகளுக்கான விசேட விழிப்புணர்வு செயலமர்வு
அறுபது ஆண்டுகளாக சிறுவர்களுக்கான உற்ப்பத்தி பொருட்களை வழங்கி வரும் பேபி செரமி நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று(27) முன்னெடுக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கர்ப்பவதிகளுக்கான குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் (27) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை பொது மண்டபத்தில் இடம்பெற்றது
அறுபது ஆண்டுகளாக சிறுவர்களுக்கான உற்ப்பத்தி பொருட்களை வழங்கி வரும் பேபி செரமி நிறுவனத்தின் சமூக சேவைகளில் ஒன்றாக இடம்பெற்ற இந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கான விசேட விழிப்புணர்வு வேலை திட்டத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுடைய மருத்துவ பீட விரிவுரையாளர் டீ.றஜீவ் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட முன் குழந்தை பருவ விருத்தி ஒருங்கிணைப்பாளர் டி. அமலன் ஆகியோர் கலந்து கொண்டு கர்பவதிகள் நடந்துகொள்ளவேண்டிய விதம் பிள்ளைகளை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தனர்
இதன்போது பல நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தனர் இறுதியாக கலந்து கொண்ட கர்ப்பவதிகளுக்காக பேபி செரமி நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பேபி செரமி நிறுவன தயாரிப்புகள் அடங்கிய பொதி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது
குறித்த கருத்தமர்வில் கலந்து கொண்ட கர்ப்பவதிகள் கருத்து தெரிவிக்கையில் உண்மையிலேயே தாங்கள் அறிந்து கொள்ளாத பல்வேறு விடயங்களை இந்த கருத்தரங்கின் ஊடாக அறிந்து கொண்டதாகவும் இது தமக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாகவும் இந்த ஏற்பாடுகளை செய்திருந்த பேபி செரமி நிறுவனத்திற்கு தங்களுடைய நன்றிகளையும் தெரிவித்து இருந்தன
பேபி செரமி நிறுவனத்தினால் கர்ப்பவதிகளுக்கான விசேட விழிப்புணர்வு செயலமர்வு
Reviewed by Author
on
June 27, 2023
Rating:
No comments:
Post a Comment