அண்மைய செய்திகள்

recent
-

அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் தங்களையும் உள்வாங்குமாறு கோரி மக்கள் கவனயீர்ப்பு!

 அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் தங்களையும் உள்வாங்குமாறு கோரி மக்கள் கவனயீர்ப்பு!


அரசின் அஸ்வெசும  கொடுப்பனவை வழங்குமாறு கோரி வீதிக்கு இறங்கிய மக்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட உடையார் கட்டு சமுர்த்தி வங்கிக்கு முன்னால்  கவனீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு,உடையார்கட்டு.குரவில்,தேராவில்,கிராங்களை சேர்ந்த மக்கள் உடையார் கட்டு பகுதியில் அமைந்துள்ள சமூர்த்தி வங்கிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்கள் போராட்டத்தின்போது ஏழைகள் வாழ்வில் ஏழனம் செய்யாமல் எங்களை உள்வாங்கு,வேண்டும் வேண்டும்அஸ்வெசும,அரசே அஸ்வெசும திட்டத்தில் அனைவரையும் உள்வாங்கு,ஜனாதிபதியே தகுதியான எங்களையும் உள்வாங்கு உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

கவனயீர்ப்பினைதொடர்ந்து கிராம மட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சிலர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் சென்று அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களிடடம்  மக்களின் கோரிக்கை அடங்கிய மனுவினை கையளித்துள்ளார்கள். இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடமும் மனுவினை கையளித்துள்ளார்கள்.
























அரசின் அஸ்வெசும கொடுப்பனவில் தங்களையும் உள்வாங்குமாறு கோரி மக்கள் கவனயீர்ப்பு! Reviewed by Author on June 27, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.