பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பதில் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றி நிருவாக உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்றுச் சென்ற ஏ.சி.எம்.பளீல், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி குடிவரவு, குடியகழ்வு உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற எம்.எம்.அஹமட் சனூன் மற்றும் இடமாற்றம் பெற்றச் சென்ற சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சத்தியவதி மனோகரன், ஜே.றையீஸா , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.எல்.ஏ.வக்கீல், ஏ.ஜே.குறைசியா, எம்.எச்.எம். நிஸ்ரின்
ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு
சாய்ந்தமருது பிரதேச செயலக நலன்புரிச் சங்க செயலாளர் எம்.ஹுசைன் முபாரக் அவர்களின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு, நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம்,
பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட்,
பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தாபனம்) எம்.ஏ.சி.சீனத்தும்மா, திட்டமிடல் பிரிவு பிரதான முகாமை சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றியாஸ் பிரிவுக்கான பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ,
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பதவி உயர்வு பெற்ற இரண்டு உத்தியோகத்தர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டு அவர்கள் அலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கு ஆற்றிய பணிகள், காரியாலய கடமைகளில் அவர்களின் முன் மாதிரியான செயற்பாடுகள் குறித்து பல உத்தியோகத்தராலும் பாராட்டிப் பேசப்பட்டது.
பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு.
Reviewed by Author
on
June 30, 2023
Rating:

No comments:
Post a Comment