இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்!
மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு 2போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மே 29 ஆம் திகதி, குறித்த சீன நாட்டவரை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை அவரை சீனாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கோரி, குறித்த சீன பிரஜையினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
June 09, 2023
Rating:


No comments:
Post a Comment