அஸ்வெசும நலத்திட்டம் – ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை
அஸ்வெசும நலத்திட்டம் – ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை
Reviewed by Author
on
June 29, 2023
Rating:

அஸ்வெசும நலத்திட்டத்தை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எழுத்து மூலமாக மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை சமர்பிக்க அனுமதிக்கப்படும்.
அஸ்வெசும நலத்திட்ட பட்டியலில் பெயர்கள் இடம்பெறாதவர்கள் www.wbb.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம்.
மேல்முறையீட்டு காலம் முடிவடைந்த பிறகு, பயனாளிகளின் இறுதிப் பட்டியலை அரசாங்கம் தயாரிக்கும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்ட பெயர்களின் பட்டியல் இறுதிஉணவை அல்ல.
தமிழ் மொழியில் மேல்முறையீடு செய்ய https://wbb.gov.lk/web/download/tamil/form ஐ பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1924 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்...
No comments:
Post a Comment