மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை
கெபிதிகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவெவ பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கட்டுவலகாலேவெவ, கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள நெல் ஆலை ஒன்றில் தங்கியிருந்ததாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மேலும் இருவர் மண்வெட்டியால் உயிரிழந்தவரின் தலையில் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு சொந்தமான 02 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெபிதிகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment