மன்னாரில் ஓடாத ரயிலுக்கு பாதைபோட்ட அரசாங்கம்
#ஓடாத_ரயிலுக்கு_பாதைபோட்ட_அரசாங்கம்
மன்னார் ரயில் சேவை கடைசியாக எப்போது வேலை செய்தது என்றுகூட என்னைப்போல் இங்கே பலருக்கும் தெரியாது.
பல மில்லியன்கள் செலவழித்து ரயில் பாதைபோட்டு ஆரவாரமாக ஆரம்பித்து வைத்தார்கள். இப்போதுகேட்டால் பயணிகளின் எண்ணிக்கை போதாதாம். ரயில் பாதை போட முதல் இதை நீங்கள் யோசித்ததில்லையா?
சரி, அதை விடுங்கள். ரயிலில் மக்கள் போவதற்கான முக்கிய காரணங்கள் ரெண்டு,
முதலாவது காரணம், ticket விலை குறைவு.
- உண்மைதான். அதற்காக சவுத்பாரில் இருக்கும் ரயில் நிலையத்திற்க்கு செல்ல ஒட்டோவிற்கு ஆகும் செலவு எவ்வளவு? அல்லது அங்கே ரயிலில் வந்திறங்கி வீட்டுக்கு செல்ல ஆகும் செலவு எவ்வளவு? கொழும்பில் இருந்து பஸ்ஸில் வர ஆகும் செலவை போல் இரண்டு மடங்கு.
மன்னாரின் தலைவர்கள் நினைத்திருந்தால், ரயில் புறபப்டும் நேரத்திற்கும் மன்னாரை வந்தடையும் நேரத்திற்கும் பயணிகள் டவுன் ஐ வந்தடைய பேரூந்துகளை ஒழுங்கு செய்திருக்க ஏலாதா?
ரெண்டாவது காரணம்,
நின்மதியாக உறங்கலாம். மலசல கூட வசதிகள் உண்டு.
- துப்பரவாக்கபடாத பெட்டிகளிலும் மலசல கூடங்கலிலும் மேய்ந்து திரியும் நுளம்புகளுக்கு மத்தியில் அவற்றை எப்படி பயன்படுத்துவது. நின்மாதியாக உறங்க முடியுமா?
இதே so called தலைவர்கள் ரயிலையும் அதன் மலசல கூடங்களையும் அடிக்கடி துப்பரவாக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் .
ஆக ரயிலில் செல்வதில் பயன் என கருதும் ரெண்டுமே மன்னாரில் பயனற்றது. பிறகு எப்படி பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்?
இவை எதையும் செய்யாமல் வெறும் விளம்பரத்திற்காக வாழும் விளம்பர விரும்பிகளை என்ன சொல்வது. இதில் இவர்களுக்கு எதிர்கால அரசியல் ஆசை வேறு. விளங்கிடும் மன்னார்.
தலையெழுத்து.
Via Raj Kumar Marius (ராஜ்குமார் பதிவு )

No comments:
Post a Comment