அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாண்புமிகு மலையகம் நடைபவனி இன்று முருகன் மடுறோட்

 இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மாண்பு மிகு மலையகம்-200 நடைபவணி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(01) மடுறோட்டிற்கு வந்ததடைந்தது


 அதனை தொடர்ந்து மலையக மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் நிகழ்வு மன்னார் வாழ் மக்களின் பங்குபற்றுதலுடனும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊழியர்கள் மற்றும் A C G இளைஞர் அனியும் இதனோடு இணைந்து வலுசேர்த்தார்கள் காலை 9:40 மணியளவில் நான்காம்  நாள் நிறைவடைந்ததுடன்

  ஆரம்பமான நடைபவனி முருன்கன் கட்டையடம்பன் ஊடாக மன்னார் வவுனியா வீதியூடாக மடுறோட்  புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்திற்கு
சென்றடைந்தது.

 இன்றைய நடைபவனியிலும் மலையக மக்கள் பிரதிநிதிகள்,மத குருக்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மெசிடோ நிறுவன ஊழியர்கள் மன்னார் மாவட்ட இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நடைபவனியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு ஆதரவை வழங்கும் விதமாக மன்னார் வாழ் மக்களால் பல்வேறு இடங்களில் தாக சாந்தி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது










மன்னாரில் மாண்புமிகு மலையகம் நடைபவனி இன்று முருகன் மடுறோட் Reviewed by Author on August 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.