மான் இறைச்சியுடன் சமாதான நீதவான் கைது!
அகில இலங்கை சமாதான நீதவான் ஒருவர் உட்பட இருவர் மான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சமனலவெவ கலகம பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஹோர்டன் சமவெளி பாதுகாப்பு வனப்பகுதியில் காணப்படும் மான்களை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சமாதான நீதிவானின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது உரிமம் பெற்ற துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பலாங்கொடை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:
Post a Comment