மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட கட்டுக்கரை திட்ட முகாமைத்துவ குழுவினர் செவ்வாய்க் கிழமை (18) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வை சந்தித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட இடர்கள் தொடர்பாக திட்டக் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.
குறிப்பாக மல்வத்தோயா மற்றும் கட்டுக்கரை குள புனரமைப்பு பணிகள் இடை நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கான உர கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.
இதன் போது குள புனரமைப்பு பணிகளை உடனடிய ஆரம்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததோடு அவர்கள் முன்வைத்த உரத்திற்கான கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மன்னார் மாவட்ட கட்டுக்கரை திட்ட குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் ஜனாதிபதியுடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக மன்னார் மாவட்ட கட்டு கரை திட்டக் குழுவினர் மேலும் தெரிவித்தனர்.
மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
Reviewed by Author
on
July 20, 2023
Rating:

No comments:
Post a Comment