சுலவேசி தீவில் படகு கவிழ்ந்து குறைந்தது 15 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தேசிய மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது படகில் 40 பயணிகள் இருந்ததாகவும் விபத்துக்கான காரணம்இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆறு பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர் என்றும் அவர்கள் உள்ளூர் வைத்தியலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுலவேசி தீவில் படகு கவிழ்ந்து குறைந்தது 15 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
July 24, 2023
Rating:

No comments:
Post a Comment