காணாமல் போன 4 சிறுமிகள் வழக்கு தொடர்பில் 2 சிறுவர்கள் கைது
மட்டக்களப்பு - வாகரையில் பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கு என வீட்டை விட்டு கடந்த வியாழக்கிழமை (10) சென்று காணாமல் போன 13 வயதுடைய 4 சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் (11) நேற்று மீட்டதுடன் 17 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய 4 சிறுமிகள் கடந்த வியாழக்கிழமை அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறி சென்று இரவாகியும் வீடு திரும்பாத தையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெஸ்டர் கிருபாகரன் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில் (11) நேற்று வாழைச்சேனை, சுங்காங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 4 சிறுமிகளையும் மீட்டதுடன் 17 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமிகள் வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் நிலையில் 4 நண்பிகளும் சம்பவ தினமான வியாழக்கிழமை அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக பெற்றோரிடம் தலா ஒவ்வொருவரும் 300 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அன்றைய தினம் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து பாடசாலை சீருடையுடன் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமிகள் அதனை கழற்ற வேறு ஆடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து பஸ்வண்டியில் ஏறி பாசிக்குடா சென்று கடலில் நீராடிய நிலையில் அங்கு நீராடிய சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்களுடன் 2 சிறுமிகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதனையடுத்து இரவாகியதால் சிறுமிகள் வீடு செல்ல பஸ்வண்டி இல்லாத காரணத்தால் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு காலையில் போகுமாறு காதலன்கள் சிறுமிகளை கோரியதையடுத்து 4 சிறுமிகளும் காதலன் ஒருவரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன 4 சிறுமிகள் வழக்கு தொடர்பில் 2 சிறுவர்கள் கைது
Reviewed by Author
on
August 13, 2023
Rating:
Reviewed by Author
on
August 13, 2023
Rating:


No comments:
Post a Comment