நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு!
நீர்கொழும்பு லெல்லம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுடப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிடிபன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை துங்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
August 12, 2023
Rating:

No comments:
Post a Comment