அண்மைய செய்திகள்

recent
-

நிகழ்வை தடுக்க யாருக்கும் உரிமையில்லை - நீதிமன்று அதிரடி உத்தரவு!

 குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும் பிரிவினவுக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.


இதேவேளை பொங்கல் உட்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியுள்ளது.

2023.08.16 அன்று முல்லைத்தீவு வவுனியா மன்னார் தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஆர்.ரி. ஜெயதிலகவால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் இடம்பெற்றால் அங்கு வரும் குழுவினருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்த கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும். எனவும்

எனவே அந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும் என தெரிவித்து வழக்கு தொடுனர் சார்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. ஆர். எம். ஏ. அமரசிங்கவால் 2023.08.16 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் AR/1028/23 எனும் வழக்கில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்து குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 106 (01) கீழ் பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக தடை உத்தரவை கோரியுள்ளனர்.

இருப்பினும் இன்று (18) குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும் பிரிவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை
பிறப்பித்துள்ளது

இதேவேளை, பொங்கல் உட்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியுள்ளது.

இந்த ஆவணத்தில் 7 நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது,

1. நிலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு - பாதிப்பு ஏற்படாதவாறு தொல்லியல் துறை அதிகாரிகள் குறிப்பிடும் திறந்தவெளியில் தொல்பொருள் அல்லாத கல், செங்கல், மணல் போன்ற ஆதரவின் மீது இரும்புத் தகடு வைத்து அதன் மீது தொல்பொருள் அல்லாத கற்களைப் பயன்படுத்தி அடுப்பு தயார் செய்து அதில் பொங்கல் சமைப்பதில் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் குறித்த இடம் தொல்பொருளியல் பாதுகாப்பு காப்பக இடமாக உள்ளதுடன் வன பாதுகாப்பு துறைக்கு சொந்தமான வனப்பகுதியாக காணப்படுவதனால் இந்த இடத்தில் தீ மூட்டும்போது வன பாதுகாப்பு துறையின் சட்டவிதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயற்பட வேண்டும்.

2. தொல்பொருளியல் எச்சங்கள் மேற்பரப்பில் காணப்படாததும், நிலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் நினைவுச்சின்னங்களில் இருந்து விலகி தொல்லியல் துறை அதிகாரிகளால் குறிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்படும் இடத்தை மட்டுமே இதற்காக பயன்படுத்த வேண்டும்.

3. அகழ்வு செய்யப்பட்ட எல்லைகளில் உள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதால் அதன் எல்லை, அரண்களில் நடக்கவேண்டாம்.

4. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் மீது உணவு, பழங்கள், திரவப்பொருட்கள், தேங்காய் போன்றவற்றை நேரடியாக வைக்க வேண்டாம்.

5. தொல்பொருட்கள் மீது தேங்காய் உடைத்தல் அல்லது பால் போன்ற திரவப்பொருட்களை தெளித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

6. திருவிழா நடவடிக்கையால் தொல்பொருளியல் இடம், நிலத்திற்கு கீழ் உள்ள தொல்பொருட்கள் மற்றும் அதன் கட்டமைப்புகளிற்கு எவ்விதமான சேதமும் ஏற்படக்கூடாது.

7. பொங்கல் பண்டிகைக்காக கூடும் மக்களால் இடத்தை வழிபடவரும் மற்றத் தரப்பினருக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என்பனவாகும்.




 

நிகழ்வை தடுக்க யாருக்கும் உரிமையில்லை - நீதிமன்று அதிரடி உத்தரவு! Reviewed by Author on August 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.