அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டானில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய தீர்த்தம் மற்றும் காவடி திருவிழா

 மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாக காணப்படும் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தம் மற்றும் காவடி  எடுக்கும் நிகழ்வானது புதன்கிழமை(30) மிகச் சிறப்பாக நடைபெற்றது.


அம்பிகைக்கான தீர்த்தம் மற்றும் காவடிகளை  நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து எடுத்து வந்து அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்  பெண்கள் தீர்த்தமும்  ஆண்கள் பறவை காவடி, செதில் காவடிகள் எடுத்து தங்களது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தார்கள்.

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 15 நாட்கள் கொண்ட மகோற்சவத் திருவிழாவில்  14ம் நாள் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.





















மன்னார் நானாட்டானில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய தீர்த்தம் மற்றும் காவடி திருவிழா Reviewed by Author on August 31, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.