மன்னாரில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
மன்னாரில் இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்ப்ட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் புதன் கிழமை மன்னார் சதோச மனித புதைகுழிய்யில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்றது
வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அரு ட்தந்தையர்கள்,உட்பட பலர் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் மாவட்ட வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
குறித்த போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னாரில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
August 30, 2023
Rating:

No comments:
Post a Comment