காலணிகள் வழங்கும் நிகழ்வு
மன் சின்னப்பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலை மாணவ மாணவிகளுக்கான காலணிகள் வழங்கும் நிகழ்வானது கடந்த 08.08.2023 செவ்வாய் கிழமை காலை 10:30 மணிக்கு பாடசாலையின் #அதிபர் #திரு லதிஸ்லாஸ் அமலானந்குமார் அவர்களினதும் பாடசாலை ஆசிரியர்களின் நெறிப்படுத்தலிலும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் #மன்/ #புனித #ஆனாள் #கல்வி #மற்றும் #சமூக #அபிவிருத்திக்குழுவின் பங்கு பற்றுதலோடும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று காலணிகள் வழங்கி வைக்கப்பட்டதாக புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிட்சர்லாந்து இணைப்பாளர் #திரு.#சுனேஸ் #சோசை தெரிவித்தார்.
மன்/ புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பானது குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டாலும் முடிந்தளவிலான செயற்பாடுகளை பாடசாலை மாணவர்களின் நலன் கருதி செயற்படுத்தி வருகின்றோம்.
இதில் ஓர் அங்கமாக மன் சின்னப்பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலையின் அதிபர் அவர்களின் எழுத்து மூலமான வேண்டுகோளுக்கு அமைவாக நிதியுதவியினை பெற்று மிகவும் சிறப்பான முறையிலே பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.
இவ் உதவியினை பாடசாலைக்கு வழங்குவதற்காக எமக்கு மொத்தமாக 138850/= தேவைப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சுவிஸ் நாட்டில் வாழும் எம் உறவுகளோடு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களால் முடிந்த நிதியுதவியினை எமக்கு தாராள மனதோடு தந்துதவினார்கள் இவர்களில்
👉 திருவாளர் பவுல் (Olten Switzerland 🇨🇭) 36,000/=
👉 திருவாளர் மயூரன் ( உரிமையாளர் Modern Möbel Switzerland 🇨🇭) 36000/=
👉 St./Anne's Education & Social Development Group Vankalai Switzerland 🇨🇭 = 66850/=
இவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.
அத்தோடு இந்த நிகழ்வதாக சிறப்பான முறையில் ஒழுங்கமைத்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு எமது அமைப்பின் சார்பான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.
இன்றைய நிகழ்வில் மன் புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததாக புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிட்சர்லாந்து இணைப்பாளர் திரு.சுனேஸ் சோசை தெரிவித்தார்.
காலணிகள் வழங்கும் நிகழ்வு
Reviewed by Author
on
August 10, 2023
Rating:

No comments:
Post a Comment