மன்னாரில் பயறு அமோக விளைச்சல் அறுவடையை பார்வையிட்டார் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்.
விவசாய செய்கை மூலம் சிறந்த ஒரு பொருளாதாரக் கொள்கை ஒன்றை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சினாலும், மாகாண குறித் தொதுக்கப்பட்ட நிதியத்தின் மூலமும் மற்றும் காம காரர்கள் சொந்த பணத்திலும் விவசாயிகளுக்கு பயறு நடுகைக்கான பொருட்கள் வழங்கப்பட்டு மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் சுமார் 1600 ஹெக்டயர் நிலப்பரப்பில் கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள நெல் வாயில்களில் மாற்றுப்பயிராக பயறு பயிரிடப் பட்டிருந்தது.
குறித்த பயிர் செய்கையின் அறுவடையை கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் வட்டுப்பித்தான் மடு பகுதியில் பயிரிடப்பட்ட அறுவடை செய்யப்பட்டு வரும் குறித்து பயிர் செய்கையை நேற்று பார்வையிட்டார்.
இதன் அடிப்படையில் குறித்த அறுவடை மூலம் மன்னார் மாவட்டத்தில் 900 மெட்ரிக் டன் பயறு விற்பனைக்காக உள்ள நிலையில் ஒரு கிலோ கிராம் பயிறு 825 ரூபாய் தொடக்கம் 850 வரை விற்கப்பட உள்ளது.
குறித்த பயிர் செய்கை மூலம் பெண்கள் நாளாந்தம் சுமார் 5000 ரூபாய் வருமானத்தை தரும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு தெரிவித்தார்.
மன்னாரில் பயறு அமோக விளைச்சல் அறுவடையை பார்வையிட்டார் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்.
Reviewed by Author
on
August 29, 2023
Rating:
Reviewed by Author
on
August 29, 2023
Rating:









No comments:
Post a Comment