சிறப்பாக இடம் பெற்ற ஓய்வு பெறும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேலின் மணி விழா நிகழ்வு 'நந்தினி அம்மா மலர்'வெளியீடும்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 3 வருடங்கள் சேவையாற்றி சேவை ஓய்வு பெறும் திருமதி ஏ. நந்தினி ஸ்ரான்லி டிமேல் அவர்களின் மணி விழா நிகழ்வு மற்றும் 'நந்தினி அம்மா மலர்' வெளியீட்டு விழா நிகழ்வும் மணிவிழா ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (25) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை (25) மதியம் 2 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது ஓய்வு பெறும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. நந்தினி ஸ்ரான்லி டிமேல் மன்னார் பஜார் பகுதியில் வைத்து மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியத்துடன் மன்னார் மாவட்டச் செயலகம் வரை அழைத்து வரப்பட்டனர்.
இதன் போது அரச அதிபரின் கணவர் மற்றும் மகள் ஆகியோரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்டச் செயலக பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, சர்வமத தலைவர்கள்,பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,இராணுவ பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு சேவை நலன் பாராட்டு இடம் பெற்றதோடு,மணி விழா நிகழ்வு 'நந்தினி அம்மா மலர்' வெளியீடும் இடம் பெற்றது.நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு 'நந்தினி அம்மா மலர்' வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம் பெற்ற ஓய்வு பெறும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேலின் மணி விழா நிகழ்வு 'நந்தினி அம்மா மலர்'வெளியீடும்.
Reviewed by Author
on
August 25, 2023
Rating:

No comments:
Post a Comment