கராத்தே போட்டியில் சாதனை
அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற வடக்கு மாகாணம் முழுவதற்க்குமாக கராத்தே போட்டியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில் வவுனியா வீரர்கள் 15 தங்கம், 12 வெள்ளி, 7 வெங்கல பதக்கங்களைப் பெற்றதுடன் முழுவதுமாக 34 பதக்கங்களைப் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளமை வவுனியாவின் சாதனையாக நோக்கப்படுகிறது
மேலும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி நுணுக்கங்களை கற்பிக்கவும் மற்றும் மாணவர்களை வளப்படுத்தவும் பக்கபலமாக இருந்து வழிகாட்டிய போதானாசிரியர் சிகான் முகம்மத் இக்பால் செயற்பட்டிருந்தார்.
இவ் மாணவர்களின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட வவுனியா மாவட்ட பயிற்றுவிப்பாளாரான சென்சே பா. மிதுஷன், சென்சே பா. ஆகாஸ் ஆகியோரை கராத்தே சமூகம் பாரட்டி நிற்கின்றது.
கராத்தே போட்டியில் சாதனை
Reviewed by Author
on
August 03, 2023
Rating:

No comments:
Post a Comment