அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் அமைப்பினால் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அமைப்புக்கான மருத்துவ அவசர ஊர்தி வழங்கி வைப்பு
அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் (Australian Tamil Union) அமைப்பினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகரில் இயங்கிவரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அமைப்புக்கான மருத்துவ அவசர ஊர்தி வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று (27) இடம்பெற்றது
அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் (Australian Tamil Union) அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் தவராசா காண்டீபன் தலையையில் இடம்பெற்ற நிகழ்வில் அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் (Australian Tamil Union) அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மருத்துவ அவசர ஊர்தியினை உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அமைப்பினரிடம் கையளித்தனர்
சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் பெறுமதியான இந்த ஊர்தி கையளிக்கும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன் முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி லிசோ கேகிதா முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி வீ.சண்முகராஜா ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ.றமேஸ் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் உறுப்பினர்கள் ,அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்
அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் அமைப்பினால் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அமைப்புக்கான மருத்துவ அவசர ஊர்தி வழங்கி வைப்பு
Reviewed by Author
on
September 28, 2023
Rating:

No comments:
Post a Comment