அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம்பெற்ற செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலய சப்பற திருவிழா

 முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் உடைய சப்பற திருவிழா நேற்றைய தினம்(27) மிக சிறப்பாக இடம்பெற்றது


செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலய சிவாச்சாரியார் கலாகரகுருக்கள் தலைமையில் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை  தொடர்ந்து 

இரவு 6.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் ஆரம்பமானது அதனை தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி உலாவந்து சப்பறத்தில் ஏறி வெளி வீதி உலா வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்

இந்த சப்பற  திருவிழாவிலே பல நூற்றுக்கணக்கான  அடியவர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் ஆட்சிகளை பெற்றுக் கொண்டனர்

கடந்த 15.09.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தினுடைய உற்சவங்களின் 13 வது உற்சவமாக இந்த சப்பற திருவிழா நேற்று (27) இடம் பெற்றதோடு இன்றைய தினம்(28) தேர்த்திருவிழாவும் நாளைய தினம்(29) தீர்த்தோட்சவத்துடன்   ஆலய உற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது 























சிறப்பாக இடம்பெற்ற செம்மலை மாணிக்கப் பிள்ளையார் ஆலய சப்பற திருவிழா Reviewed by Author on September 28, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.