மன்னார் மாவட்டத்தில் இன்று 9 மணி நேர நீர் விநியோகத் தடை
மன்னார் நீர் வழங்கல் திட்டத்தில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் இன்று புதன்கிழமை 20ஆம் திகதி (20.09.2023) காலை 9 மணி முதல் பி.ப. 6 மணி வரையிலான 9 நேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
முருங்கன் மற்றும் அண்டிய பகுதிகள்,மன்னார் நகர் மற்றும் அண்டிய பகுதிகள், பள்ளிமுனை மற்றும் அண்டிய பகுதிகள், எழுத்தூர் மற்றும் அண்டிய பகுதிகள், தோட்டவெளி,சிறுத்தோப்பு, எருக்கலம்பிட்டி, வங்காலை மற்றும் அண்டிய பகுதிகள், அடம்பன் மற்றும் அண்டிய பகுதிகள், திருக்கேதீஸ்வரம் மற்றும் நாகதழ்வு ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இன்று 9 மணி நேர நீர் விநியோகத் தடை
Reviewed by Author
on
September 20, 2023
Rating:

No comments:
Post a Comment