அண்மைய செய்திகள்

recent
-

இறுதி போட்டியில் இந்திய அணி படைத்த சாதனைகள்

 விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த 2023 ஆசியக் கிண்ண தொடர் முடிவை எட்டியுள்ளது. 

தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 7 முறை ஆசிய செம்பியனான இந்திய அணியும், 6 முறை ஆசிய செம்பியனான இலங்கை அணியும் அடுத்த கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 15.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.

பின்னர் வெற்றி இலக்கை எதிர்கொண்டு களத்திற்கு வந்த இந்திய அணி 6.1 ஓவர்கள் நிறைவில் 51 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதுவரை 7 முறை ஆசிய கிண்ணத்தை வெற்றிபெற்றிருந்த இந்திய அணி, 8வது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள் பின்வருமாறு.

* இந்தியா தனது 8-வது ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது

* குறைவான (16) பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, ODI-ல் அதிவேகமாக படைத்தவர் என்ற உலக சாதனையை (சமிந்த வாஸுடன்) முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்

* ODI-ல் குறைவான (1002) பந்துகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் (அஜந்தா மெண்டிஸ்க்கு பின்) என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார்.

* ODI-ல் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைும் படைத்துள்ளார் சிராஜ்.

* ODI கிரிக்கெட்டில் அதிக பந்துகளை (263) மீதம் வைத்து மிகப்பெரிய வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது

* 6.1 ஓவரில் செய்த இந்தியாவின் ரன் சேஸிங் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக சேஸ் செய்யப்பட்ட 5-வது சிறந்த சேஸிங்காக மாறியுள்ளது

* ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை (98) பதிவு செய்த அணியாக இந்தியா தொடர்கிறது

* ஆசிய கிண்ணத்தை 2வது முறையாக வெல்லும் 3-வது இந்திய தலைவராக (தோனி & அசாருதின் உடன்) ரோகித் சர்மா மாறியுள்ளார்.




இறுதி போட்டியில் இந்திய அணி படைத்த சாதனைகள் Reviewed by Author on September 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.