மன்னார் முசலி வைத்தியசாலைக்கு MLT நியமனம்.
மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT - Medical Laboratory Technician) ஒருவரை பெற்றுத்தர உதவிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த வைத்தியசாலையில் இதுவரை காலமும் நிலவிய மேற்படி பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புமாறு தலைவர் ரிஷாட் பதியுதீன், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு மற்றும் வடமாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் ஆகியோரிடம் தொடர்ந்தேர்ச்சியாக, எழுத்துமூலமாகவும் தொலைபேசி ஊடாகவும் தொடர்புகொண்டு, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, நிரந்தரத் தீர்வை பெற்றுத்தந்தமைக்காக, முசலி மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று, மேற்படி விடையத்தில் முயற்சிகளை செய்த பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களுக்கும் ஏனைய அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பாக, வடமாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ், இந்த விடையத்தில் நேரடியாகத் தலையீடு செய்து, மேற்படி வெற்றிடத்தை பூர்த்தி செய்தமைக்காக அவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
அத்துடன், சுகாதர அமைச்சர், வடமாகாண சுகாதார பணிப்பாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, இந்த விவகாரம் தொடர்பில் முயற்சிகளை மேற்கொண்ட வைத்தியர் தன்ஸீஹ், வைத்தியர் ரிஸ்வான் கலீல், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க செயளாலர் முஹம்மது ஷகீல், அல்தாப் உட்பட சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மன்னார் முசலி வைத்தியசாலைக்கு MLT நியமனம்.
Reviewed by Author
on
September 01, 2023
Rating:

No comments:
Post a Comment