மொரோக்கோ நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
மொரோக்கோவில் ஏற்பட்ட சக்கதிவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது.
மொரோக்கோவின் ஹை அட்லஸ் மலைகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம், மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள நகரமான மராகேச்சில் உள்ள வரலாற்று கட்டிடங்களை சேதப்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1,037 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 672 பேர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

No comments:
Post a Comment