ராமேஸ்வரத்தை சேர்ந்த 37 மீனவர்கள் கைது:-தலைமன்னார் கடற்படை முகாமில் 23 மீனவர்கள் தடுத்து வைப்பு.
இலங்கை கடற்பரப்பில் சீன உளவு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து நேற்று (28) மாலையில் இருந்து இலங்கை கடற்படையினர் இலங்கையின் பல்வேறு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து ராமேஸ்வரத்தை சேர்ந்த 03 படகும் அதிலிருந்து 23 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 2 படகு அதிலிருந்து 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த 14ம் திகதியில் இருந்து நேற்று (28) மாலை வரை இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 10 விசைப்படகுகளும் அதிலிருந்து 64 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 37 மீனவர்கள் கைது:-தலைமன்னார் கடற்படை முகாமில் 23 மீனவர்கள் தடுத்து வைப்பு.
Reviewed by Author
on
October 29, 2023
Rating:

No comments:
Post a Comment