தனியாக சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்
பொலிஸ் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று (12) இரவு உணவுப் பொதி ஒன்றை வாங்குவதற்காக களுத்துறை வடக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிளே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் இதற்கு முன்னர் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும், அவ்வேளையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் தாக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment