அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன் முறையாக முன்பள்ளி மாணவர்களுக்கு இலத்திரனியல் கல்வி முறைமை ஆரம்பம்.

 

கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளியில் BLUE BRICK SCHOOL என்ற நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  நிகழ்வானது 

அமெரிக்காவைச் சேர்ந்த அமரர் திரு. லூயிஸ் போல் அவர்களின் அன்பின் நினைவாக விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனத்தினால் BLUE BRICK SCHOOL நிகழ்வானது அவருடைய மகனான திரு.றோகான் போல் மற்றும் அவரது குடும்பத்தின் நிதி உதவி அளிக்கப்பட்டு  முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளியில் ஆரம்ப நிகழ்வு 19.10.2023 இன்றைய தினம் காலை 10.00 மணி்க்கு இடம்பெற்றது. இதன் போது கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளிக்கு 10 Tabs மற்றும் 10 ஹெட் செட் என்பன வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிமனையின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு. உ.சுரேஷ்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனத்தின் தலைவர் திரு.ந.தெய்வேந்திரராஜா அவர்களும், விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனத்தின் பொருளாளர் திரு.அ.மைக்கல் ராஜகுமார் அவர்களும் விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.அ.மயூரன் அவர்களும் கலந்து கொண்டனர். இத்துடன் கள்ளப்பாடு தெற்கு கிராம சேவையாளர், கள்ளபாடு தெற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர், கள்ளிப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர், விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள், கிராமிய அமைப்புக்கள், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், கள்ளிப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளி பெற்றோர், மாணவர்கள் என நிகழ்வில் கலந்துகொண்டனர்.























முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன் முறையாக முன்பள்ளி மாணவர்களுக்கு இலத்திரனியல் கல்வி முறைமை ஆரம்பம். Reviewed by Author on October 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.