முல்லைத்தீவில் குடிநீர் திட்டம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
வட கிழக்கு புனர்வாழ்வு அமைப்பினால் ஆலயத்திற்கு அமைக்கப்பட்ட குழாய்கிணறு கையளிக்கும் நிகழ்வு முள்ளியவளை 3 ஆம் வட்டார பகுதியில் இன்று 01.10.2023 நடைபெற்றுள்ளது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தில் உள்ள முல்லைக்குமரன் ஆலயத்திற்கு 2.5 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குழாய் கிணறு கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், சுகிர்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது இன்று சிறுவர் நாளினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் விளையாட்டு கழகம் ஒன்றிற்கு வலைப்பந்தும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதுக்குடியிருப்பு பகுதியிலும் வீட்டுத்தோட்டம் செய்யும் மக்களுக்கான பொது கிணறு ஒன்றும் இதன்போது அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள வேலுப்பிள்ளை தங்கவேலு நக்கீரன் அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கனடா கிளையின் தலைவராக அவர் இருக்கின்றார் அவரின் 90 ஆவது பிறந்த நாளில் அவருக்கு கிடைத்த அன்பளிப்பினை வழங்கியுள்ளார் மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினையினை சீர்செய்யும் நோக்கில் இந்த குடிதண்ணீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் குடிநீர் திட்டம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
Reviewed by Author
on
October 01, 2023
Rating:

No comments:
Post a Comment