ஐக்கிய காங்கரஸ் கட்சியின் அமைப்பாளர் மேலங்கிகளை வழங்கினார்
புத்தளம் - கடையாமோட்டை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் உதைப் பந்தாட்ட அணி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் இறுதிப் போட்டிக்குச் செல்கின்றனர்.
பாடாசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வணியினருக்கு சுமார் 53,000/= பெறுமதியான மேலங்கிகளை PALAVI TRANSPORT உரிமையாளரும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கடையாமோட்டை இணைப்பாளருமான அப்துல் நிஸார் அவர்கள் அன்பளிப்பு செய்தார்.
நிகழ்வில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் பாரூக் முஹம்மது ராபி மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் செயற்குழு உருப்பினர் தாசிம் அவர்களும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment