போதைப்பொருடன் சிக்கிய இமா!
கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளரான டுபாயில் தலைமறைவாகியுள்ள கலனவின் போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டினுள் வழிநடத்தி வந்த யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
'இமா' என்ற குறித்த பெண்ணிடம் இருந்து 5 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ராகம பொலிஸ் பிரிவின் குருகுலாவ பிரதேசத்தில் நேற்று (04) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
இதன்போது வத்தளை, எந்தேரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இமா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துனுமலை பிரதேசம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பான துப்பாக்கிகளை அவர் கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

No comments:
Post a Comment