அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா புளியங்குளம் வடக்கு முத்துமாரிநகர் மக்கள் உண்ணாவிரத போராட்டம்

 வவுனியா புளியங்குளம் வடக்கு முத்துமாரிநகர் மக்கள் இணைந்து ஐந்து அம்ச கோரிக்கையினை முன்னிறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று காலை ஆரம்பித்துள்ளனர்.


குறித்த போராட்டமானது வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும், புளியங்குளம் வடக்கு கிராம சேவகரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதேச செயலாளர் பதில் வழங்காமைக்குரிய காரணம் என்ன?, 15 வருடங்களாக முத்துமாரி நகர் ஏ புளக் காணிகளுக்கு காணிப்பத்திரம் வழங்காமைக்குரிய காரணம் என்ன?, எந்தவிதமான குற்றச்செயல்களும் இல்லாமல் எட்டு இளைஞர்களை நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமைக்கான காரணம் என்ன? என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி புளியங்குளம் வடக்கு முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் கொட்டகை அமைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள் எமது ஐந்து அம்சக் கோரிக்கைகளிற்கு உடனடி தீர்வு கிடைகக்ககும் வரை குறித்த போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். 







வவுனியா புளியங்குளம் வடக்கு முத்துமாரிநகர் மக்கள் உண்ணாவிரத போராட்டம் Reviewed by Author on October 27, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.