மின்விசிறியில் மோதி மாணவன் பலி
புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் வகுப்பறையில் மேலும் சில மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, நாற்காலியின் உதவியுடன் மேசையின் மீது ஏறிய போது கூரை மின்விசிறியில் மோதி அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
புபுரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்விசிறியில் மோதி மாணவன் பலி
Reviewed by Author
on
October 05, 2023
Rating:

No comments:
Post a Comment