கொள்ளுபிட்டியில் 5 உயிர்களை காவு கொண்ட மரம்!
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (06) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுபிட்டியில் 5 உயிர்களை காவு கொண்ட மரம்!
Reviewed by Author
on
October 06, 2023
Rating:

No comments:
Post a Comment