அண்மைய செய்திகள்

recent
-

கண்டியில் இடம்பெற்ற வர்த்தக சந்தை, கண்காட்சி- வடமாகாணத்தில் இருந்து மெசிடோ நிறுவனத்தின் உற்பத்தியாளர்கள் பங்கேற்பு.

 மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற சுய தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான சுய தொழில் பயிற்சிகளை வழங்கி பயனாளிகளை ஊக்குவித்து வருகின்றது.


 அந்த வகையில் கருவாடு பதனிடுதல், பனை உற்பத்தி பொருட்கள்,சவர்க்கார உற்பத்தி இன்னும் பல சிறு தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

 இப் பயிற்சிகளின் ஊடாக பயனாளிகள் தங்களுடைய உற்பத்திகளை அதிகரித்து வருமானம் ஈட்டி வரும் நிலை. இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் சந்தை வாய்ப்பு ஒன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

இவ் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் முகமாக  பயனாளிகளான தொழில் முயற்சியாளர்களுக்கு தங்களுடைய உள்ளூர் உற்பத்திகளான கருவாடு, சவர்க்கார் உற்பத்திகள், பனை உற்பத்தி பொருட்களை கண்டிக்கு கொண்டு சென்று மூன்று நாட்கள் கடந்த  (6இ7இ8)  திகதிகளில் நடை பெற்ற சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பல இலட்சம் லாபம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

அத்தோடு உள்ளுர் உற்பத்தித் தொழில் முயற்சியாலர்களை ஊக்குவித்த நிறுவனமான எமது நிறுவனத்திற்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது.

 அது மட்டும் இன்றி சர்வதேச  சந்தை வாய்ப்பு மற்றும் கண்காட்சி இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் எதிர்வரும்  நவம்பர் மாதம் 2 ஆம் திகதி  வரை (Vietnam,Hanoi. 2023.October 30  to November 02 2023) வியட்நாம்   நாட்டில் சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.







கண்டியில் இடம்பெற்ற வர்த்தக சந்தை, கண்காட்சி- வடமாகாணத்தில் இருந்து மெசிடோ நிறுவனத்தின் உற்பத்தியாளர்கள் பங்கேற்பு. Reviewed by Author on October 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.