வவுனியா தபால் நிலைய ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (30.10) மதியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரியும், அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்தும் நாடு பூராகவும் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, ''20 ஆயிரம் ரூபாய் சமட்பள அதிகரிப்பை வழங்கு, வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு, மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா தபால் நிலைய ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
October 30, 2023
Rating:

No comments:
Post a Comment