நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்-அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு.
சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நீதி மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் நீதித்துறை,நீதிபதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறைக்கு எதிராக இன்று புதன்கிழமை (4) மன்னார் மாவட்ட இளைஞர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் இணைந்து கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-மேலும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்சியான அடக்குமுறை செயல்பாடுகளை கண்டித்து பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,சட்டத்தரணி செல்வராசா டினேசன்,உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள்,உறுப்பினர்கள்,மன்னா
நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்-அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு.
Reviewed by Author
on
October 04, 2023
Rating:

No comments:
Post a Comment