இதுவரையில் 9,000 க்கும் அதிகமானோர் பலி
உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி தொடங்கிய தாக்குதலானது 25 நாட்களாக தொடர்கிறது.
இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் என அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுவதால் ஐ.நா-வும் உலக நாடுகளும் போரை நிறுத்துமாறு வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 9,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுள்ளனர். இதில் 3,320 குழந்தைகளும் அடங்குவர். மேலும் 20,000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் 9,000 க்கும் அதிகமானோர் பலி
Reviewed by Author
on
October 31, 2023
Rating:

No comments:
Post a Comment