வவுனியா - ஹொரவப்பொத்தனை வீதியில் இறந்த நிலையில் யானை மீட்பு
வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் இறந்த நிலையில் யானை ஒன்று இன்று (28.10) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஹொரவப்பொத்தானை காட்டுப் பகுதியில் இருந்து வீதி நோக்கி வந்த யானையே வீதி ஓரத்தில் இறந்துள்ளது. வீதியால் சென்றவர்கள் குறித்த யானை இறந்து இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த யானை இறந்தமைக்கான காரணம் தொடர்பில் வளஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா - ஹொரவப்பொத்தனை வீதியில் இறந்த நிலையில் யானை மீட்பு
Reviewed by Author
on
October 28, 2023
Rating:

No comments:
Post a Comment