அண்மைய செய்திகள்

recent
-

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதிகள் அன்பளிப்பு.

 பேருவளையைச் சேர்ந்த ஆசிரியை மர்ஹுமா ஸீனத் நயிமா அமீன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் புதல்வர் எம்.பிராஸ் அவர்களினால் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது  லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திற்கு 5 கணனிகள் இன்று அன்பளிப்புச் செய்யப்பட்டன.


லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் தகவல் தொழிநுட்ப பாடத்தினை கற்றுக்கொள்வதற்கு கணனிகள் இல்லாத குறை நீண்டகாலமாக இருந்து வந்தது. அதனை அடுத்து அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன் சாய்ந்தமருது பிரதேசத்தின் கணனி விற்பனை முஹம்மட் முபீன் அவர்களிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவரின் பூரண சிபாரிசின் அடிப்படையில் மேற்படி கணனிகள் குறித்த பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றது.

இக்கணனிகளை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான் உட்பட பாடசாலையின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனைப் பெற்றுத்தர முழுப்பங்களிப்பு வழங்கிய சகோதரர் முஹம்மட் முபீன் அவர்களுக்கும் இதனைத் தந்துதவிய சகோதரர் பிராஸ் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை சமூகம் தெரிவித்தனர்.








சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதிகள் அன்பளிப்பு. Reviewed by Author on November 02, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.