வீட்டினுள் நுளைந்த திருடனை மடக்கிப்பிடித்த சுகாதாரபரிசோதகர்!! இருவர் காயம்!!
வவுனியாவில் வீட்டினுள் நுளைந்து திருடமுற்றப்பட்ட நபர் ஒருவரை மடக்கிப்பிடித்த சுகாதாரபரிசோதகர் அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் சோயாவீதியில் குறித்த சம்பவம்
இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..
இன்று அதிகாலை குறித்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுளையமுற்ப்பட்டதை வீட்டின் உரிமையாளரான சுகாதாரபரிசோதகர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து சுதாகரித்துக்கொண்ட சுகாதாரபரிசோதகரும் அவரது குடும்பத்தினரும், திருடனை மடக்கிப்பிடித்து மரத்துடன்கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.
பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதுடன், திருடனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த சம்பவத்தில் திருடன் கத்தியால் தாக்கியதில் சுகாதாரபரிசோதகருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரரான ஊடகவியலாளர் ஒருவருக்கும் சிறுகாயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்டட்டுள்ளனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர் மீது நீதிமன்றில் வேறு வழுக்குகளும் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வீட்டினுள் நுளைந்த திருடனை மடக்கிப்பிடித்த சுகாதாரபரிசோதகர்!! இருவர் காயம்!!
Reviewed by Author
on
November 27, 2023
Rating:

No comments:
Post a Comment