இலங்கை குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்கள் இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபா பணம் படகுக்கு கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் கடற்படையினர் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் தாய்,தந்தை,உள்ளடங்களாக 5 பிள்ளைகளும் அடங்குகின்றனர்.இது தொடர்பான மேலதிக விசாரணை இந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்.
Reviewed by Author
on
November 27, 2023
Rating:

No comments:
Post a Comment