மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல சிரமதான பணிகள் முன்னெடுப்பு
தமிழ் மக்களின் உரிமைப் போரின் போது தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் நவம்பர் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களால் நினைவு கூறப்படவுள்ளது.
இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணி குழுவினரால் இன்று(4) ஆரம்பிக்கப்பட்டது.
மாவீரர் நெடுங்கீரனின் தந்தை வீரசிங்கம் தலைமையில் குறித்த சிரமதான பணி இடம் பெற்ற நிலையில் சிரமதானத்தின் பின்னர் முதல் பெண் போராளி இரண்டாம் லெப் மாலதியின் சகோதரன் தொம்மை அவர்களினால் பொது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் தந்தை ராசாவினால் மலர் வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது
குறித்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதான பணியில் முன்னாள் போராளிகள்,மாவீரர்களின் பெற்றோர்கள்,துயிலும் இல்ல பணி குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல சிரமதான பணிகள் முன்னெடுப்பு
Reviewed by Author
on
November 04, 2023
Rating:

No comments:
Post a Comment