வடமாகாண உணவு உற்பத்தி நிறுவனங்களின் சிறந்த உணவு உற்பத்தி சான்றிதலை மன்னார் 'நியோ ஐஸ் கிறீம்' நிறுவனம் பெற்றுக்கொண்டது.
உணவு உற்பத்தி நிறுவனங்களின் சிறந்த உணவு உற்பத்தி சான்றிதழ் (GMP) வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்(10) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டம் சார்பாக 'நியோ ஐஸ் கிறீம் நிறுவனம்' மட்டுமே இச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நியோ ஐஸ் கிறீம் நிறுவனத்தின் நிறுவுனர் இம்மனுவேல் கோட்வின் விமல்றாஜ் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.
சிறந்த உணவு உற்பத்தி சான்றிதழ் வடமாகாணத்தில் உள்ள 40 உணவு உற்பத்தி நிறுவனங்கள் பெற்றுக் கொண்டுள்ள போதும் மன்னார் மாவட்டத்தில் உள்ள எந்த உணவு உற்பத்தியாளர்களும் பெற்றுக்கொள்ளாத இந்த GMP சான்றிதழ் நியோ ஐஸ் கிறீம் நிறுவனத்திற்கு மாத்திரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment