அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் சிறப்பாக இடம்பெற்ற புத்தாக்க கண்காட்சி

 மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இயந்திர தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்காட்சி பாடசாலை அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு FSC தலைமையில் இன்றைய தினம் (07) வியாழக்கிழமை பாடசாலை பொது ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.


புதிய தொழில் நுட்பங்களை மாணவர்கள் தேடி கற்று அதன் ஊடாக கல்வியை விருத்தி செய்யும் முகமாகவும் அதன் ஊடாக மாணவர்களின் எதிர்காலத்தை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடனும் குறித்த கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.

குறித்த கண்காட்சி வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் முன்னாள் அதிபரும் டிலாசால் அருட் சகோதரர்களுக்கான வடமாகாண இணைப்பாளர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் FSC , சிறப்பு விருந்தினராக மன்னார் வலய உதவி கல்வி பணிப்பாளர் (கணிதம்) நவனீதன் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரிய ஆலோசகர் ஞானசீலன் அக்கடமி இணைப்பாளர் மோகன் குரூஸ் ஓய்வு பெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியான் சட்டத்தரணி மடுத்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கண்காட்சியில் 6-12 வரையிலான மாணவர்கள் உருவாக்கிய,கண்டுபிடித்த 100 மேற்பட்ட கருவிகள்,மற்றும் புத்தாக்க பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தது.

 குறிப்பாக அபிஷான் எனும் மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட மாகாண ரீதியாக முதலிடம் பெற்ற Smart Bed எனும் கருவி பலராலும் பாராட்டப் பட்டமை குறிப்பிடத்தக்கது. 



















மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் சிறப்பாக இடம்பெற்ற புத்தாக்க கண்காட்சி Reviewed by NEWMANNAR on December 07, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.